மின்சார வாகனங்களுக்கான மானியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் மின்சார ஸ்கூட்டர்களின் விலை 15 ஆயிரம் ரூபாய் வரை குறைய வாய்ப்பு

0 30580

மின்சார வாகனங்களுக்கான மானியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால் மின்சார ஸ்கூட்டர்களின் விலை 15 ஆயிரம் ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது.

மின்சார வாகனத் தயாரிப்புக்கான ஊக்குவிப்புத் திட்டத்தின்படி பேருந்துகளைத் தவிர, மற்ற அனைத்து வாகனங்களுக்கும் ஒரு KWh-க்கு பத்தாயிரம் ரூபாய் என்கிற அளவில் முன்பு மானியம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ஒரு KWh-க்கு 15 ஆயிரம் ரூபாய் என மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் மின்சார இருசக்கர வாகனங்களின் விலை ஏழாயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை குறையும் என்பதால், இவ்வகை வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வருவதற்கு உதவும் என வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments