கொரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமையை விலக்கிக் கொள்ளுங்கள்: ஜி-7 நாடுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

0 3083

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு முறியடிக்க ஒரே பூமி, ஒரே சுகாதாரக் கட்டமைப்பு என்கிற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு மருந்துகளுக்குக் காப்புரிமையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஜி-7 நாடுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுள்ளன. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் உரையாற்றினார்.

அப்போது, கொரோனா பெருந்தொற்றைத் திறமையாகக் கையாண்டு முறியடிக்க ஒரு பூமி, ஒரு சுகாதாரக் கட்டமைப்பு என்கிற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான காப்புரிமையைத் தற்காலிகமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உலகளாவிய ஒற்றுமை, தலைமை ஆகியவற்றால் எதிர்காலத்தில் பெருந்தொற்றுகள் வருவதைத் தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். சவால்களை எதிர்கொள்ள ஜனநாயக மற்றும் வெளிப்படையான சமூகங்களிடையே சிறப்புப் பொறுப்புணர்வு இருக்க வேண்டியதைப் பிரதமர் வலியுறுத்தினார். பிரதமர் மோடியின் கருத்துக்களுக்கு ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments