டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு

0 2861

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர் நலன் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு சுதந்திர தினத்தன்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பெயரில் தமிழக அரசு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது .

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதைப் பெற தகுதியுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான நபரை, தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும்.

அவருக்கு வரும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதை வழங்கவுள்ளார். விருதுடன், 5 லட்ச ரூபாய்க்கான காசோலையும் 8 கிராம் தங்கத்திலான பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments