இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை சுமார் 81 ஆயிரமாகக் குறைந்தது

0 3767

கடந்த 71 நாட்களிலேயே மிகவும் குறைவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும்  நோய் தொற்றில் இருந்து குணமாகி ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 62 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 24 மணி நேர இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 303 ஆக பதிவாகி உள்ளது. கொரோனா பாதித்து மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சத்து 26 ஆயிரமாக உள்ளது.

இதுவரை சுமார் 25 கோடியே  32 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments