வடசென்னையின் பிரபல ரௌடி காக்காதோப்பு பாலாஜி கைது

0 3060

சென்னையைச் சேர்ந்த பிரபல ரௌடி காக்காதோப்பு பாலாஜி விழுப்புரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான் என தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் கைது செய்யப்பட்ட தென்சென்னை பகுதி ரௌடி சி.டி. மணியின் கூட்டாளியான காக்காதோப்பு பாலாஜி மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஆர்.கே. நகர் போலீசார் அவனை தீவிரமாகத் தேடி வந்த நிலையில் விழுப்புரத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் விரட்டிப் பிடிக்கும் முயற்சியின்போது காக்காதோப்பு பாலாஜியின் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments