பூட்டி இருந்த வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்... வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பி ஓட்டம்

0 2859

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த பஞ்சம்திருத்தியில் பூட்டி இருந்த வீட்டில் கைவரிசையை காட்டிவிட்டு அகப்படாமல் இருக்க மிளகாய் பொடியை தூவிச் சென்ற கள்வர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேவந்திரன் என்பவரின் வீடு பூட்டிக் கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 5 சவரன் நகை மற்றும் 6 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். மேலும் போலீசாரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பி உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments