கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி... மாஸ்கோவில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல்

0 3052

கொரோனா பரவல் அதிகரிப்பு காராணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை மாகாண ஆளுநர் Sergei Sobyanin அமல்படுத்தி உள்ளார்.

ரஷ்யாவில் கடந்த ஒரு நாளில் 13 ஆயிரத்து 510 பேருக்கும், அதிகபட்சமாக மாஸ்கோவில், 6 ஆயிரத்து 701 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் அங்கு மீண்டும் பரவல்  புது உச்சம் தொட்டதை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஊரடங்கு காலத்தில் பார்கள், உணவகங்கள் என அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் மூத்த குடி மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கவும், அதிவிரைவாக மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக யுரோ கால்பந்து போட்டிகளில் ரசிகர்களை அனுமதிப்பதா என்ற சர்ச்சைகள் ஏழுந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments