ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

0 2185

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மத்திய கோர் மாகாணத்தில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் மீது தாலிபான்கள் திடீரெனத் தாக்குதல் நடத்தினர்.

இதனை சற்றும் எதிர்பாராத ராணுவ வீரர்கள் நிலைகுலைந்த போன நிலையில் இருதரப்பினருக்கும் கடும் சண்டை மூண்டது. இதில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முகாமில் இருந்து ஏராளமான துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகளை தாலிபான்கள் அள்ளிச் சென்றனர்.

இதனிடையே நாடு முழுவதும் ஆங்காங்கே நடந்த தாக்குதல்களில் 152 தாலிபான் இயக்கத்தினர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments