விரைவில் படப்பிடிப்பு முடிவுக்கு வரும்... வலிமை படக்குழுவின் தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

0 5067

“ தி ஃபேமிலி மேன்” வெப் சீரிசின் “செல்லம் சார்” கதாபாத்திரத்தையும் விட்டுவைக்காமல் வலிமை பட அப்டேட் குறித்து கேட்டு அஜித் ரசிகர்கள் சேட்டை செய்த நிலையில், படத்தின் அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது.

“ தி ஃபேமிலி மேன்” வெப் சீரிசில் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உதய் கணேஷ், பல சிக்கலான கேள்விகளுக்கு சாதாரணமாக பதிலளித்து பார்ப்போரின் புருவம் உயர வைத்து வருகிறார்.

செல்லம் சார் என்ற அந்த கதாப்பாத்திரம் பட்டி தொட்டி எங்கும் டிரெண்டான நிலையில், அஜித் ரசிகர்கள் அவரையும் விட்டுவைக்காமல் வலிமை அப்டேட் குறித்து சொல்லுங்கள் செல்லம் சார் என டிவிட்டரில் ட்ரெண்டாக்கினர்.

இதனையடுத்து படத்தில்  ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டுமே எடுக்க வேண்டி இருப்பதாகவும், டப்பிங் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் படப்படிப்பும் முடிவுக்கு வரும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments