காஷ்மீரில் 50 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை அமைத்தது இந்திய ராணுவம்

0 2358

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2 வது அலையை எதிர்கொண்டுள்ள நிலையில் காஷ்மீரின் ஸ்ரீநகரில் புதிய மருத்துவமனையை ராணுவத்தினர் கட்டியுள்ளனர்.

50 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 10 படுக்கைகள் வென்டிலேட்டர் உதவியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவாகவும், 20 படுக்கைகள் ஆக்ஸிஜன் உதவியுடன் கூடிய படுக்கைகளாகவும் ஏனைய 20 சாதாரண படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் ராணுவ மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments