இந்தியா முழுவதும் இதுவரை 25 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது - மத்திய அரசு

0 2621

இந்தியாவில் இதுவரை 25 கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா தடுப்பூசி பேரியக்கம் தொடங்கி 148 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்தியா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 31 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறியுள்ள நிலையில், நாடு முழுவதும் 25 கோடியே 28 லட்சத்து 78 ஆயிரத்து 702 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 10 லட்சம் பேருக்கும் அதிகமாக தடுப்பூசி போட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments