டெல்லியின் சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் தீ விபத்து

0 2179

டெல்லியின் சென்ட்ரல் மார்க்கெட் எனப்படும் முக்கிய வர்த்தகப் பகுதியில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 5 பெரிய கடைகள் எரிந்து சாம்பலாகின.

ஏராளமான ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கடைகள் மிகுந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் பல கோடி ரூபாய் பொருட் சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆயினும் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர் .

அப்பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு  30 தீயணைப்பு வண்டிகளுடன் வந்த 100க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் காலை முதல் மாலை வரை பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.பின்னர் வெப்பத்தைத் தணிப்பதற்காக அங்குள்ள கட்டடங்களுக்கு நீரைப் பாய்ச்சும் பணி நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments