இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கென்யாவில் வரவேற்பு

0 2376

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக ஆப்பிரிக்க நாடான கென்யா சென்றுள்ளார்.

அங்கு அவரை அந்நாட்டு வெளியுறவுத்துறை தலைமை நிர்வாகச் செயலாளர் அபாபு நம்வாம்பா வரவேற்றார். இந்திய, கென்ய இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் தொடர்ச்சியான சந்திப்புகளை ஜெய்சங்கர் நடத்துவார் என்று அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்திய, கென்ய கூட்டுக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினருடனும் ஜெய்சங்கர் கலந்துரையாடுகிறார். இந்தியாவும், கென்யாவும் தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பு நாடுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments