தமிழகம் வந்த 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன

0 2385

தமிழகம் வந்தடைந்த 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் அனைத்து மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.

மத்திய அரசால் வழங்கப்பட்ட 3 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 1,26,270 கோவேக்சின் மருந்துகள், நேற்று தமிழகம் வந்தடைந்தன. இதனையடுத்து அவை 37 மாவட்டங்களில் உள்ள 45 சுகாதார மையத்திற்கு பிரித்து அனுப்பப்பட்டன.  இதில்  காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  பூந்தமல்லி,  திருவள்ளூரை உள்ளடக்கிய  சென்னை  மண்டலத்திற்கு அதிகபட்சமாக 46,500 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 18,170 கோவேக்சின் என 64,670 தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

ஈரோடு, திருப்பூர், நீலகிரியை உள்ளடக்கிய கோவை மண்டலத்திற்கு 43,000 கோவிஷீல்டு மருந்துகளும்,  17,800 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகளும் அனுப்பப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக ராமநாதபுரம்,  பரமக்குடியை உள்ளடக்கிய சிவகங்கை மண்டலத்திற்கு 15 ஆயிரத்து 600  கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments