காருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.!

0 27523

சென்னை பள்ளிக்கரனையில் திமுக பெண் எம்பியின் பெயரில் போலியான கார் பாஸ் வைத்துக் கொண்டு, தோழியுடன் பொழுதை கழித்த பல் மருத்துவரை போலீசார் கைது செய்தனர். முதலில் போலீசை ஏமாற்றி தப்பிச் சென்றவரை வீட்டிற்கே சென்று சுற்றிவளைத்த சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை பள்ளிகரணை ரேடியல் சாலையின் இரு புறமும் உள்ள சதுப்பு நில பகுதி சாலையை ஒட்டி புதர் போல் செடிகள் வளர்ந்து காணப்படுகின்றது. அங்கு போதுமான மின் விளக்குகள் இல்லாததால் இந்த பகுதிகளை சிலர் சமூக விரோத செயலுக்கான மறைவான இடமாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அங்கு அடிக்கடி ரோந்துபணியில் ஈடுபடும் காவல் துறையினர் சம்பந்தம் இல்லாமல் நிற்கும் வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி இரவு 9 மணியளவில் புதரை ஒட்டிய பகுதியில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அவ்வழியாக ரோந்து சென்ற பள்ளிகரணை ஆய்வாளர் பிரவின் ராஜேஷ், அந்த கார் குலுங்குவதை கண்டு சந்தேகமடைந்து அந்த கார் அருகில் சென்று உள்ளே இருப்பது யார் ? என்று விசாரித்தார்.

போலீஸ் வாகனத்தை கண்டதும் காரில் இருந்து இறங்கிய இளம்பெண் ஒருவர் அருகில் நின்ற மொபட்டை எடுத்துக் கொண்டு வேக வேகமாக தப்பிச்சென்றார். காருக்குள் அரை குறை ஆடைகளோடு இருந்த இளைஞரை விசாரித்த போது தான் தென் சென்னை எம்.பியின் உறவினர் என்று கூறியதோடு, எம்.பிக்கள் பயன்படுத்தும் கார் பாஸ் ஒன்றையும் காட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச்சென்றதாக கூறப்படுகின்றது

இருந்தாலும் ஆய்வாளருக்கு சந்தேகம் தீராததால், தென் சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனை தொடர்பு கொண்டு கார் நம்பரை குறிப்பிட்டு இளைஞர் குறித்து கேட்டபோது, அந்த நபரை தமக்குத் தெரியாது என கூறியுள்ளார்.

இதையடுத்து எம்.பியின் பெயரை தவறாக பயன்படுத்தும் அந்த இளைஞரை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். கார் நம்பரை வைத்து விசாரித்த காவல்துறையினர். சம்பந்தப்பட்ட இளைஞரின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

இதில் ஆய்வாளரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்ற இளைஞர் மடிப்பாக்கத்தை சேர்ந்த பல்மருத்துவர் ஷியாம் கண்ணா என்பதும், ராஜகோபாலன் என்ற மருத்துவரிடம் இருந்து திமுக எம்.பியின் கார் பாஸை வாங்கி கலர் ஜெராக்ஸ் எடுத்து அதில் தனது கார் நம்பரை அச்சிட்டு போலியாக பயன்படுத்தியது தெரியவந்தது.

ஊரடங்கு காலம் என்பதால் போலீசாரிடம் இருந்து தப்பிக்கவும், சுங்க கட்டணத்தை தவிர்க்கவும் இந்த போலியான கார்பாஸுடன் வலம் வந்து மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட ஷியாம் கண்ணா, காரில் தன்னுடன் இருந்த பெண் தனது காதல் தோழி என்றும் இருவரும் காரில் அமர்ந்து , மனம் விட்டு பேசி, குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார் .

எம்.பி.யின் பெயரில் போலியான பாஸ் பயன்படுத்தியதோடு, நோய்பரவலை ஏற்படுத்தும் வகையில் ஊரடங்கை மீறியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்த பள்ளிகரணை போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதே நேரத்தில் எம்பியின் பெயரில் போலியாக பாஸ் தயாரிக்கப்பட்டது எப்படி? இதில் தொடர்புடைய நபர்கள் யார்? யார்? பாஸ் வழங்கிய ராஜகோபாலன் யார் ?என்று பள்ளிகரணை போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

அகில இந்திய எமர்ஜென்ஸி ஆக்சன் நெட்ஒர்க்கின் செயலாளராக இருப்பதாக கூறி அந்த டுபாக்கூர் சங்கத்தின் பெயரில் பெரிய அளவில் போர்டு ஒன்றை காரில் பொறுத்திக் கொண்டு ஊருக்குள் சுற்றியுள்ளார்.

ஊருக்கேல்லாம் சமூக இடைவெளியையும், முககவசத்தையும் பரிந்துரைத்த பல் மருத்துவரே, சமூக இடைவெளியை மறந்து காருக்குள் காதலியுடன் கச்சேரி வைத்து , சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments