கடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத சேட்டை... மீனவர் வலைகளை அறுக்க பிளான்.!

0 8847

ச்சத்தீவு கடல் எல்லையில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களின் வலைகளுக்கு வேட்டுவைக்கும் விதமாக பழைய உடைந்த பேருந்து இரும்பு கூடுகளை இலங்கை அரசு கடலுக்குள் இறக்கி வரும் தகவல் மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

செயற்கை பவளப்பாறை போல பேருந்து கூடுகளை கடலுக்குள் இறக்கி மீன்வளத்தை பெருக்குவதற்கு டக்ளஸ் கொடுத்த விபரீத யோசனை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

இந்தியாவில் கான்கிரீட்டால் செய்த முக்கோணவடிவிலான கற்களை கடலுக்குள் போட்டு அவற்றை செயற்கை பவளபாறைகளாக உருவாக்கி அதன் மூலம் மீன்வளத்தை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடலுக்குள் கிடக்கின்ற அந்த கற்கள் மீன்களின் வாழ்விடமாக மாறியுள்ளது. இதனால் மீனவர்களின் வலைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

எதையும் வில்லங்கமாக யோசிக்கும் திறன்கொண்ட அமைச்சர்களை கொண்ட இலங்கையில் காயலான் கடையில் இரும்புக்கூடுகளாக இத்துபோய் கிடக்கும் பழைய பேருந்துகளை கடலில் இறக்கி அதன் மூலம் மீன்களுக்கு வாழ்விடங்களை உருவாக்கினால், மீன் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று டக்ளஸ் தேவானந்தா கொடுத்த யோசனையை ஏற்று தற்போது பழைய பேருந்து கூடுகளை கடலுக்குள் இறக்கி வருகின்றனர்

சுமார் 40 பழைய பேருந்துகூடுகளை ராணுவ கப்பலில் ஏற்றி வந்து அவற்றை இந்திய கடல் எல்லையை ஒட்டிய பகுதியான கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினா தீவு உள்ளிட்ட கடல் பகுதிகளில் இலங்கை தரப்பினர் கடலுக்குள் இறக்கி வருகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 4 பேருந்துகளை மட்டுமே கடலுக்குள் இறக்க இயலும் என்பதால் இந்த பேருந்துகளை எல்லாம் கடலுக்குள் இறக்குவதற்கு குறைந்தது 10 நாட்களாவது பிடிக்கும் என்று கூறப்படுகின்றது.

இலங்கை அரசும் டக்ளசும் மீன்வளத்தை பெருக்குவதற்கு என்று கூறினாலும் இதற்கு இலங்கை மீனவர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இந்த இரும்பு கூடுகள் இருக்கும் இடத்தில் நண்டுவலை, சுறாவலை, திருக்கை வலை, கும்பிளா வலை போன்றவற்றை பயன்படுத்தி மீன்பிடிக்க முடியாது. எனவே மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்க்கிடையே முழுக்க முழுக்க தமிழக மீனவர்களின் வாழ்வதரத்தை அழிக்கும் தீய எண்ணத்தில் கடலுக்குள் இந்த பழைய பேருந்து கூடுகளை இலங்கை அரசு வீசுவதாக கூறும் இந்திய, இலங்கைகூட்டு பேச்சுவார்த்தை குழு தலைவர் சேசு ராஜா, இன்னும் ஒரு வார காலத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைய இருக்கும் இந்த நேரத்தில், கடலில் மீன்களுக்காக மீனவர்கள் வீசும் வலைகளை அழிக்கும் நோக்கத்தில் , உலகில் வேறு எங்கும் காண இயலாத படுபாதக செயலை செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்

இலங்கை கடல் எல்லையில் பேருந்துகள் வீசப்படுவதால், இந்திய கடல் எல்லைக்குள் விரிக்கப்படும் வலைகள் காற்றில் அந்த பக்கம் நகர்ந்து இந்த பேருந்து கூடுகளில் வலைகள் சிக்கிக் கொண்டால், 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை மீனவர்களுக்கு இழப்பு ஏற்படும் என்றும், புயல் போன்ற கடல் சீற்றம் அதிகமாக உள்ள காலங்களில் இந்த பேருந்து கூடுகளால் உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

எனவே மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இந்த நாசகர செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே இலங்கையில் கொழும்பு கடற்பகுதியில் இதே போல இரும்பு கூண்டுகளை கடலில் இறக்கியதாகவும், அதனை மீன்கள் தங்கள் வாழ்விடமாக மாற்றிக் கொண்டதால் , இனப்பெருக்கம் அதிகரித்து மீன்வளம் பெருகியதாகவும், அதன்படியே தற்போது இலங்கை கடல்பரப்பில் மேலும் 40 பேருந்து கூடுகள் இறக்கப்படுவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments