தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உறுதி.. 374 பேர் பலி..!

0 4842
தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உறுதியானது

கோயம்புத்தூரில் பல நாட்களுக்குப்பிறகு, 2 ஆயிரத்திற்கு கீழும், சென்னையில் சில வாரங்களுக்குப்பின் ஆயிரத்திற்கு கீழும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 108 பேருக்கு, புதிதாக வைரஸ் தொற்று உறுதியானது.

நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்து, ஒரே நாளில் 27 ஆயிரத்து 463 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கோவையில் ஆயிரத்து 982 பேரும், ஈரேட்டில் ஆயிரத்து 353 பேரும், சென்னையில் 989 பேரும், திருப்பூரில் 844 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

17வயது திருவள்ளூர் இளம்பெண், 95 வயது மற்றும் 97 வயது சென்னை மூதாட்டிகள் உள்பட ஒரே நாளில் கொரோனா பெருந்தொற்றுக்கு 374 பேர் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments