மதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பலன் தரும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை

0 2902

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் போல, மதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம் தென் மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாது , போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த நூலகம் மற்றும் காட்சியகங்கள் அமைக்க உத்தரவிடக்கோரி, தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ளாதங்களை கேட்ட நீதிபதிகள் சென்னை - அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் எப்படி ஒரு நாள் போதாதோ அதைப் போல மதுரையில் அமையப்போகும் நூலகமும் இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளதாக குறிப்பிட்டனர்.  தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், பின்னர் வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments