தமிழிசையைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும் - ராமதாஸ்

0 3939

மிழிசையைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ் இசையின் சிறப்புகள் குறித்து ராமதாஸ் எழுதிய இசையின் இசை என்கிற நூலின் வெளியீட்டு விழா இணைய வழியில் நடைபெற்றது.

நூலைப் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் வெளியிடப் புஷ்பவனம் குப்புசாமி பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பேசிய ராமதாஸ், தமிழிசையைக் குழந்தைப் பருவத்திலிருந்தே படிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதற்காகத் தான் பள்ளிகளில் தமிழிசையைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என முந்தைய திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த கலைஞரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அந்தக் கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments