கொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலுகை.!

0 9928

கொரோனா சிகிச்சையில் பயன்படும் டாசிலிஜுமாப் (Tocilizumab), கரும்பூஞ்சைக்கான ஆம்போடெரிசின்-பி (Amphotericin B) ஆகிய மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி மீதான வரி ரத்து செய்யப்படாத நிலையில், ஆக்சிஜன், ஆக்சிஜன் கருவிகள், பல்ஸ் ஆக்சிமீட்டர், மின்மயானத்தில் பயன்படும் எரிகலன்கள் மீதான வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சையில் பயன்படும் டாசிலிஜுமாப் (Tocilizumab), கரும்பூச்சைக்கான ஆம்போடெரிசின்-பி (Amphotericin B) ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதேபோல கொரோனோ சிகிச்சையில் பயன்படும் ஹெப்பாரின் (Heparin), ரெம்டெசிவிர் (Remdesivir) மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர், வென்டிலேட்டர் மாஸ்க் மற்றும் சுவாசக் கருவிகள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை கருவி, பாதிப்புகளை கண்டறியும் சோதனைக் கருவிகள், பல்ஸ் ஆக்சி மீட்டருக்கும் ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. உடல் வெப்ப பரிசோதனை கருவி, ஹேண்ட் சானிட்டைசர், மின்மயானங்களில் பயன்படும் எரிகலன்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருநது 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரிச்சலுகைகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், தேவைக்கேற்ப நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாகவே தொடரும் என்றும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments