தனியார் மருத்துவமனைகளில் சுமார் 1 கோடி டோஸ் தடுப்பூசி பயன்படுத்தப்படாமல் இருப்பதாக தகவல்

0 3694

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில், சுமார் 1 கோடி டோஸ் தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே மாதம் மொத்தம் 7 கோடியே 40 லட்சம் டோசுகள் பயன்பாட்டுக்கு தயாரான நிலையில் ஒரு கோடியே 85 லட்சம் டோசுகள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஆனால் தனியார் மருத்துவமனைகள் ஒரு கோடியே 29 லட்சம் டோசுகளை மட்டுமே வாங்கின. அதிலும் 22 லட்சம் டோசுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட கட்டணம் வசூலிக்கப்படுவதால், அங்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை  என கூறப்படுகிறது.

தனியாரில், வரிகள் மற்றும் சேவைக்கட்டணம் உள்பட  கோவிஷீல்டு டோஸ் 780 ரூபாய்க்கும், ஸ்புட்னிக்-வி 1145 ரூபாய்க்கும்,கோவேக்சின் 1410 ரூபாய்க்கும் போடப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments