அர்ச்ககர் பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினருக்கும் நூறு நாட்களில் கோவில்களில் பணி - அமைச்சர் சேகர்பாபு

0 3391

னைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் அடுத்த நூறு நாட்களில் கோவில்களில் பணியமர்த்தப்படுவர் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்றும், அதற்காக அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதன்மையான கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் எனப் பதாகை வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், தமிழில் அர்ச்சனை செய்ய அர்ச்சகர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார் . 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments