சீனாவுக்கு எதிரான பொருளாதார போட்டியில் ஜி-7 உள்ளிட்ட ஜனநாயக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்

0 2497
சீனாவுக்கு எதிரான பொருளாதார போட்டியில் ஜி-7 உள்ளிட்ட ஜனநாயக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்

சீனாவுக்கு எதிரான பொருளாதார போட்டியில் ஜி-7 உள்ளிட்ட ஜனநாயக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தி உள்ளார்.

பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நடக்கும் ஜி-7 நாட்டுத் தலைவர்களின் மாநாட்டில் பேசிய அவர், சீனாவில் தொழிலாளர் வர்க்கம் அடிமைத்தனத்துடன் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டினார்.

பல கோடி டாலர் மதிப்பில் சீனா உருவாக்கும் பெல்ட் அன்ட் ரோடு திட்டத்திற்கு மாற்றாக , தனியார் பங்களிப்புடன் Build Back Better for the World என்ற பெயரில் பல நாடுகளை இணைக்கும் பொருளாதார வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கும் பைடனின் திட்டம் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

அதே நேரம் பைடன் அளவுக்கு ஐரோப்பிய நாடுகள் சீனாவை எதிர்க்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments