அமெரிக்க - ரஷ்ய உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் கீழ்நிலையில் உள்ளது :விளாடிமிர் புடின்

0 1927
அமெரிக்கா - ரஷ்யா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் கீழ்நிலைக்குச் சென்றுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - ரஷ்யா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் கீழ்நிலைக்குச் சென்றுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஜூன் 16ஆம் நாள் சந்தித்துப் பேச உள்ளனர். இந்நிலையில் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த விளாடிமிர் புடின், அமெரிக்கா - ரஷ்யா இடையிலான உறவுகள் அண்மைக்காலமாக மிகவும் கீழ்நிலைக்குச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மிகத் திறமையானவர் என்றும், மதிநுட்பம் வாய்ந்தவர் என்றும் புடின் குறிப்பிட்டார். ஜோ பைடன் டிரம்பைவிட முற்றிலும் வேறுபட்டவர் என்றும் புடின் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments