"தடுப்பூசி டோசுகளின் இடைவெளியை அதிகரித்தால் தொற்று அபாயம் அதிகரிக்கும்" -Dr.அந்தோணி பவுசி எச்சரிக்கை

0 4191

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோசுகளுக்கு இடையேயான கால இடைவெளியை நீட்டித்தால், தற்போது பரவும் ஒரு மரபணு மாற்ற வைரசால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகரான டாக்டர் அந்தோணி பவுசி எச்சரித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்த அவர், பிரிட்டனில் இப்படி இடைவெளியை அதிகரித்ததால், பலருக்கு புதிதாக தொற்று எற்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார்.

அதே நேரம் தடுப்பூசிக்கு தட்டுபாடாக இருந்தால் இடைவெளியை நீட்டிப்பது பற்றி பரிசீலிக்கலாம் எனவும் அவர் கூறினார். கடந்த மாதம் கோவிஷீல்டு தடுப்பூசி டோசுகளின் இடைவெளியை 6முதல் 8 வாரங்களில் இருந்து 12 முதல் 16 வாரங்களாக மத்திய அரசு அதிகரித்தது.

அதற்கு முன்னர் மார்ச் மாதம்,இந்த இடைவெளி 28 நாட்களில் இருந்து 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments