”எஞ்சிய 2 ஆண்டுகளுக்கும் தாமே முதலமைச்சர்; மோடி, அமித் ஷா வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன்” -எடியூரப்பா

0 3295

ஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகளுக்கும், தாமே கர்நாடகத்தின் முதலமைச்சராக நீடிக்கப்போவதாக எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இதை தெரிவித்த அவர், தாம் மாற்றப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்களை மறுத்தார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பேற்றுவேன் என்றார் அவர்.

எடியூரப்பாவை மாற்றக் கோரி, கர்நாடக பாஜக எம்எல்ஏக்களில் ஒரு தரப்பினர் கட்சித் தலைமையை வலியுறுத்துவதாக தொடர்ந்து தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக மேலிட பொறுப்பாளரான பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் அடுத்த வாரம் பெங்களூ வர உள்ளார். அப்போது அதிருப்தி எம்எல்ஏக்களை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments