தடுப்பூசி போடும் பணி மீண்டும் தீவிரம்.. வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுச் சென்ற பொதுமக்கள்..!

0 2806
தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுச் சென்றனர்.

தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுச் சென்றனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு 10,100 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்ததை அடுத்து, 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மதுரையில் 3 நாட்களுக்குப் பின் தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. 2 நாட்களில் 16,500 டோஸ் தடுப்பூசிகள் மதுரை மாவட்டத்திற்கு வந்துள்ளன.

கோவை மாவட்டத்தில் மொத்தமாக 89 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. ஒவ்வொரு முகாமுக்கும் 100 முதல் 500 டோஸ் தடுப்பு மருந்து அனுப்பப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நெசவாளர் காலணி ஆரம்ப சுகாதார நிலையங்களில், தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏராளமானோர் திரண்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் 7 நாட்களுக்குப் பிறகு 84 மையங்களில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், ஏராளமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு வாரம் கழித்து 40 சிறப்பு முகாம்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் டோக்கன் வாங்குவதற்காக ஏராளமானோர் காத்திருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 33 இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஒவ்வொரு முகாமிலும் 200 முதல் 500 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை 14,300 டோஸ் தடுப்பூசிகள் வந்ததை அடுத்து, மீண்டும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments