பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகார்..! சிவசங்கர் பாபாவுக்கு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன்

0 3167
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகார்..! சிவசங்கர் பாபாவுக்கு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன்

ள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் சிவசங்கர் பாபாவுக்கு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

தன்னை கடவுளின் அவதாரம் என கூறிக் கொள்ளும் சிவசங்கர்பாபா, தான் நடத்தி வரும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் முதலில் அனுப்பிய சம்மனுக்கு சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. உத்தரகாண்டுக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சிவசங்கர் பாபாவுக்கு மாராடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிவசங்கர் பாபா மற்றும் சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் தரப்பில் இருவர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments