”நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையில் 719 மருத்துவர்கள் பலி” -இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல்

0 2135

கொரோனா இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 719 மருத்துவர்கள் மருத்துவ சேவையில் தங்கள் உயிரை அர்ப்பணித்துள்ளதாக ஐஎம்ஏ என்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக, பீகார் மாநிலத்தில் 111 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். டெல்லியில் 109 மருத்துவர்கள் கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டு அதே நோய்க்கு உயிரிழந்தனர்.

2வது அலையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 32 மருத்துவர்கள் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசத்தில் 79 மருத்துவர்களும், மேற்கு வங்கத்தில் 63 பேரும் கொரோனா பணியில் தங்கள் உயிரை தியாகம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments