கேரளாவில் இன்றும், நாளையும் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடு..! அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து உத்தரவு

0 2730

கேரளாவில் இன்றும், நாளையும் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு அரசு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. கேரளாவில் 16-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று விகிதம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் லேசான தளர்வு அமல்படுத்தப்பட்டது.

இதையொட்டி நீண்ட தூர பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏற்கனவே வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்பட அத்தியாவசிய நிறுவனங்கள், கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், நேற்று கட்டுப்பாடு இல்லா தளர்வு அமல்படுத்தப்பட்டது.

இதையொட்டி கடைவீதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கொரோனா கட்டுப்பாடு விதிகள் எங்கும் கடைபிடிக்கப்பட வில்லை. இந்த நிலையில் கேரளாவில் இன்றும் நாளையும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments