”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை

0 2147

சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று போன்றவை என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அவர் கவலை தெரிவித்தார். உலகின் வாகன எண்ணிக்கைப்படி இந்தியாவில் 3 சதவீத வாகனங்களே சாலையில் ஓடுகின்றன.

ஆனால் உலகளவில் ஒப்பிடுகையில் 11 சதவீத விபத்துகள் இந்தியாவில் தான் நிகழ்வதாக தெரிவித்த அவர் இது ஒன்றும் கொரோனா தொற்றைவிட எந்தவகையிலும் குறைந்து விடவில்லை என்று கூறினார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நடைபெறும் இடங்களைக் கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்கான நான்கு புதிய மென்பொருள்கள் வெளியிடப்பட்டிருப்பதாகவும் ராஜ்நாத்சிங் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments