யூரோ கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலத் தொடக்கம்..!

0 3009

கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி ரோம் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது.

ஆண்டுதோறும் நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்துத் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, தற்போது தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 அணிகளாகப் பிரிந்து லீக் ஆட்டங்களில் விளையாடுகின்றன.

இதையொட்டி, ரோம் நகரின் ஒலிம்பிக்கோ ஸ்டேடியத்தில் தொடக்க விழா விமர்சையாக நடைபெற்றது.

பேண்டு வாத்தியக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிக்கு நடுவே, 24 அணிகள் பங்கேற்பதைக் குறிக்கும் வகையில் ஹீலியம் நிரப்பப்பட்ட பந்துகள் மைதானத்தில் பறக்கவிடப்பட்டன.

பிரமாண்ட வாணவேடிக்கைகளைக் கண்டு அங்கு திரண்டிருந்த 16 ஆயிரம் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

U2 கலைஞர்களான போனோ, தி எட்ஜ், மார்ட்டின் காரிக்ஸ் குழுவினரின் இசைநிகழ்ச்சி காணொலி வாயிலாக இடம்பெற்றது.

16-வது யூரோ ஆண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் தொடக்க ஆட்டத்தில் துருக்கி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இத்தாலி அணி வெற்றி பெற்றது. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.

2-வது பாதியில் ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது. இத்தாலி வீரர்கள் மெர்ரி டெமிரல் 53-வது நிமிடத்திலும், சிரோ இம்மொபைல், லோரன்சோ இன்சையின் ஆகியோர் 66 மற்றும் 79-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர்.

இறுதிவரை கோல் போட முயன்ற துருக்கி வீரர்களின் முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போனது. இறுதியில் 3-க்கு 0 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments