பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழப்பு; மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடம்

0 3134

பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள குஜ்தார் மாவட்டத்தில் நடந்த மத நிகழ்வில் பங்கேற்று ஏராளமானோர் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது வளைவு ஒன்றில் பேருந்து வேகமாகத் திரும்பியதால் கட்டுப்பாட்டினை இழந்து அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments