”மக்களின் உயிரைக் காக்கும் தடுப்பூசியை வீணாக்க வேண்டாம்” -மத்திய அரசு கோரிக்கை

0 2300

கொரோனா தடுப்பூசி வீணடிக்கப்படுவது ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக இருக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பூசி உலக அளவில் பற்றாக்குறையுடன் இருக்கும் அத்தியாவசியமான சுகாதாரப் பொருள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி தயாரிக்க நிறைய நேரம் செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், பலருக்கும் தடுப்பூசி தேவைப்படும் நேரத்தில் அதனை வீணடிப்பதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது.

எனவே தடுப்பூசி வீணாவது ஒரு விழுக்காடு அல்லது அதற்கும் குறைவாக இருக்கவேண்டும் என்று தனது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments