உத்தரப் பிரதேசத்தில் கடவுளுக்கு ஆதார் அட்டை கேட்ட அரசு அதிகாரிகள்; கோயில் விளைபொருட்களை விற்கச் சென்றவர்கள் அதிர்ச்சி..!

0 1900

த்தரப் பிரதேசத்தில் கோயில் விளைபொருளை விற்கச் சென்றவரிடம் கடவுளின் ஆதார் அட்டை தரும்படி கேட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Banda மாவட்டத்தில் Kurhara கிராமத்தில் அமைந்துள்ள ராம்- ஜானகி கோயிலுக்குச் சொந்தமாக நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தில் விளைந்த 100 குவிண்டால் கோதுமையைக் கடந்த வாரம் விற்பனை செய்ய கோயில் பணியாளர்கள் சந்தைக்கு எடுத்துச் சென்றனர்.

அப்போது அவர்களிடம் சந்தையில் பதிவு செய்ய கடவுளுக்கான ஆதார் அட்டை கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோதுமையை விற்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களின்படி சந்தைகளில் விளைபொருட்களை விற்க ஆதார் அட்டை மூலம் பதிவு செய்தவர்களால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments