அவசியமின்றி வெளியில் வர வேண்டாம்-பொதுமக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

0 4231

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடைகளின் நுழைவுவாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கைசுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும்,அனைத்துகடைகளும், குளிர்சாதனவசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூகஇடைவெளியைகடைப்பிடிக்கும்வகையில்ஒரேநேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.

பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுககொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments