புற்றுநோய் ஏற்பட்டு ஒரு காலையும் இழந்து செவிலியர் பயிற்சியை முடித்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் பணி வழங்க வேண்டுகோள்

0 2209

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, புற்றுநோய் ஏற்பட்டு ஒரு காலையும் இழந்து செவிலியர் பயிற்சியை முடித்த இளம்பெண் ஒருவர் அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

கீர்த்தனா என்ற அந்தப் பெண்ணின் தாயார் அவர் பிறந்த 10 நாட்களிலேயே இறந்துவிட, கீர்த்தனா 10வது படிக்கும்போது அவரது தந்தையும் இறந்திருக்கிறார். அதன்பின்னர் தனது அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்த கீர்த்தனாவுக்கு காலில் புற்று நோய் பாதித்து, அந்தக் காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

பெரும் போராட்டத்துக்கு இடையே செவிலியர் பயிற்சியை முடித்த கீர்த்தனா தற்போது தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசுப் பணி வழங்க வேண்டும் என கீர்த்தனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments