மேலும் 3.65 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தது

0 2359

புனேவில் இருந்து தனியார் விமானம் மூலம் 3 லட்சத்து 65 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

தமிழகத்தின் 36 மாவட்டங்களில் தடுப்பூசி கையிருப்பு தீர்ந்ததால், தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி, வியாழக்கிழமை 85ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. அதன் தொடர்ச்சியாக மேலும் 3 லட்சத்து 65 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன.

தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இந்த தடுப்பூசிகள் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்தப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments