பெட்ரோல், டீசலுடன் எத்தனால் கலந்து விற்பனை செய்வதை செயல்படுத்த 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட மத்திய அரசு திட்டம்

0 2330
பெட்ரோல், டீசலுடன் எத்தனால் கலந்து விற்பனை செய்வதை செயல்படுத்த 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பெட்ரோல், டீசலுடன் எத்தனால் கலந்து விற்பனை செய்வதை செயல்படுத்த 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் ஏற்படும் செலவை குறைக்க, எரிபொருளுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்கும் திட்டத்தை 2025 - ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அவ்வாறு செயல்படுத்தினால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவில் ஆண்டுதோறும் சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும். இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் ஆண்டுக்கு ஆயிரம் கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்பட வேண்டும். அதற்காக 50 ஆயிரம் கோடி செலவிட்டு கட்டமைப்புகளை உருவாக்க பெட்ரோலிய அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments