BMW-ன் முன்னாள் அதிகாரி உல்ரிச் கிரான்சைப் பணியமர்த்திய ஆப்பிள்

0 1965
ஆப்பிள் நிறுவனம் தனது மின்சாரக் கார் திட்டத்துக்காக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான உல்ரிச் கிரான்சைப் பணியமர்த்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது மின்சாரக் கார் திட்டத்துக்காக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான உல்ரிச் கிரான்சைப் பணியமர்த்தியுள்ளது.

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூவில் பணியாற்றிய உல்ரிச் கிரான்ஸ், அந்த நிறுவனத்தின் ஐ3 மின்சாரக் கார், ஐ8 பந்தயக் கார் ஆகியவற்றின் தயாரிப்பில் முக்கிய பங்காற்றியவர்.

ஆப்பிள் நிறுவனம் தனது மின்சாரக் கார் திட்டத்துக்காகக் கானூ என்னும் நிறுவனத்தைக் கையகப்படுத்த பேச்சு நடத்தியது. இந்தப் பேச்சு முறிந்தபோதும் கானூவின் நிறுவனர்களில் ஒருவரான உல்ரிச் கிரான்சைத் தனது மின்சாரக் கார் திட்டத்தைச் செயல்படுத்தத் தேர்ந்தெடுத்துள்ளது.

அவர் டெஸ்லா முன்னாள் அதிகாரியான டக் பீல்டுடன் இணைந்து ஆப்பிள் கார் தயாரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments