போக்குவரத்து போலீசாருக்கு மிரட்டல் விடுத்த பெண் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பார் கவுன்சிலுக்கு காவல் துறை கடிதம்

0 3806
சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து போலீசாருக்கு மிரட்டல் விடுத்த பெண் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பார் கவுன்சிலுக்கு காவல் துறை கடிதம் எழுதியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து போலீசாருக்கு மிரட்டல் விடுத்த பெண் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பார் கவுன்சிலுக்கு காவல் துறை கடிதம் எழுதியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் கடந்த வாரம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரிடம் தகராறு செய்த பெண் வழக்கறிஞர் தனுஜா என்பவர் போக்குவரத்து போலீசாரை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகி வைரலானது.

இது தொடர்பாக பெண் வக்கீல் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே அவர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கறிஞர் தனுஜா மீதான சட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments