ஐதராபாத்தில் காவலரை செருப்பால் தாக்கிய தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேர் கைது

0 2241

தராபாத்தில் காவலரை தொழிலதிபர் ஒருவர் செருப்பால் தாக்கிய வீடியோ வைரலாகிவருகிறது.

சங்க ரெட்டி மாவட்டத்திலுள்ள பதஞ்ச்சேருவில், வழக்கு தொடர்பான நோட்டீஸ் கொடுக்க சென்ற காவலர் ஒருவரை தொழில் அதிபர் செருப்பால் அடித்து சித்ரவதை செய்தார்.

அவருடைய கூட்டாளிகளும் காவலரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகின. இதுகுறித்து காவலர் அளித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட தொழில் அதிபர் மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments