தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் :சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2649

மிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடகடலோர மாவட்டங்களில் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வரும் 13,14 மற்றும் 15ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், ஓரிரு உள் மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments