கதவின் தாழ்ப்பாளை வாயால் திறந்து மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு... ஆச்சரியத்தில் கிராம மக்கள்..!

0 4949

சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆடு ஒன்று தன் வாயால் இரும்பு கதவின் தாழ்ப்பாளை திறந்து சக ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்லும் காட்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

சிக்கனம்பட்டியை சேர்ந்த கலைமணிசாமிநாதன் என்பவர் பட்டியில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு ஆடு மற்றும் பட்டியில் உள்ள கதவின் தாழ்பாளை தன் வாயால் இலவகமாக திறந்து மற்ற ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்கிறது.

ஆட்டின் செயலை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments