4 பேருடன், மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் ’பறக்கும் டாக்சி’ அறிமுகம்..!

0 3537
ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் மேக்கர் (Maker) எனப்படும் பறக்கும் டாக்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் மேக்கர் (Maker) எனப்படும் பறக்கும் டாக்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாகவும், எரிபொருள் தேவையைக் குறைக்கும் வகையிலும் இந்த வாகனம் முற்றிலும் மின்சார பேட்டரியால் இயக்கப்படுகிறது. கார் போன்ற வடிவத்தில் இருக்கும் இந்த பறக்கும் டாக்சியில் 4 பேர் பயணிக்க முடியும்.

100 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய இந்த டாக்சியானது, மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறனுடையது.

காரில் 60 முதல் 90 நிமிடங்கள் மேற்கொள்ளப்படும் பயணமானது, பறக்கும் டாக்சியில் ஐந்து முதல் ஏழு நிமிடங்களாக குறையும். ஆர்ச்சரின் பறக்கும் டாக்சி 2024 ஆம் ஆண்டு சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments