தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் துவக்கம்..!

0 2741

கொரோனா தடுப்பூசிகள் வந்ததை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 2-வது தவணை கோவேக்சின் செலுத்துவோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு 1750 டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் வந்த நிலையில், திருவள்ளூர், பூந்தமல்லி ஆகிய இரு இடங்களில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. கோவாக்ஸின் 2-வது தவணை செலுத்துவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்த வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.  

மதுரையில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கூடுதலாக 2500 டோஸ் தடுப்பூசிகள் வந்ததை அடுத்து, 2-வது தவணை செலுத்துவோருக்கு மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது. முதல் டோஸ் தடுப்பூசி போடுவதற்காக ஆர்வத்துடன் வந்த இளைஞர்கள், முதியவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கடலூர் அரசு மருத்துவமனைக்கு 2500 கோவேக்சின் தடுப்பூசி வந்துள்ளது. இங்கும் 2-வது தவணை செலுத்துவோருக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

கோவையில் கடந்த 5 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட 36 மையங்களில் கோவேக்சின் 2-வது தவணை செலுத்துவோருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஓவ்வொரு மையத்திலும் தலா 190 பேருக்கு என்ற அடிப்படையில் கோவேக்சின் செலுத்தப்படுகிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 நாட்களுக்கு பிறகு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து தடுப்பூசியினை போட்டுக்கொண்டனர். கிராமப்புறங்களில் தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டாததால் முகாம்கள் வெறிச்சோடி இருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments