அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை - மருத்துவ அலுவலர் பணியிட மாற்றம்.!

0 3312
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவ அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவ அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்குள்ள சித்த மருத்துவப் பிரிவில் பணியாற்றி வரும் பெண் ஒருவருக்கு ஹோமியோபதி பிரிவில் உதவி மருத்துவ அலுவலராகப் பணியாற்றிய முத்துக்கிருஷ்ணன் என்பவர் கடந்த 18ஆம் தேதி பாலியல் தொல்லை அளித்தார் என்று கூறப்படுகிறது.

ஊரடங்கு விதிகளின்படி 50 விழுக்காடு அலுவலர்கள் மட்டுமே வரவேண்டும் என்ற நிலையில், அன்றைய தினம் அந்த வளாகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும் முத்துக்கிருஷ்ணனும் மட்டுமே இருந்துள்ளனர்.

தனிமை சூழலைப் பயன்படுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற முத்துக்கிருஷ்ணனிடம் இருந்து தப்பிப்பதற்காக போராடியதாக பெண் ஊழியர் கூறுகிறார்.

உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தால் அரசாங்க வேலைக்கு பாதிப்பு வந்துவிடுமோ என முதலில் பயந்த அவர், பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மாவட்ட தலைமையிடம் புகாரளித்துள்ளார். அதன்படி முத்துக்கிருஷ்ணன் மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments