காரில் வந்து கைவரிசை காட்டிய களவாணி குடும்பம்..! இறைச்சி கடையில் நாட்டு கோழிகள் திருட்டு

0 6309

சென்னையில் குடும்பத்தோடு காரில் வந்து ஆடு திருடிய கும்பலை போலீசார் தேடி வரும் நிலையில், அதே குடும்பம், இறைச்சிக்கடையில் இருந்த நாட்டுக்கோழிகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பாடி வள்ளலார் தெருவில் பூபாலன் என்பவர் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 30ஆம் தேதி தனது கடையில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாட்டுக் கோழிகள் சிலவற்றை காணவில்லை என போலீசில் புகாரளித்திருந்தார்.

இந்த நிலையில் அன்றைய தினம் அதிகாலை காரில் வந்த ஒரு கும்பல், கூண்டின் பூட்டை உடைத்து, கோழிகளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே கொரட்டூர் பகுதியில் சொகுசு காரில் வந்து ஆடு திருடிய அதே குடும்பம்தான் அது என்பதை உறுதி செய்த போலீசார், அவர்களைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments