இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 91,702 பேருக்கு கொரோனா பாதிப்பு; 3,403 பேர் உயிரிழப்பு

0 2507

ந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 92 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 91 ஆயிரத்து 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 ஆயிரத்து 403 பேர் பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 1 லட்சத்து 34 ஆயிரம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 21 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

மாநிலவாரியாக தினசரி பாதிப்பு அடிப்படையில், 16 ஆயிரத்து 813 பேருக்கு உறுதி செய்யப்பட்டு தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 14 ஆயிரத்து 424 பேருக்கு உறுதி செய்யப்பட்டு கேரளா இரண்டாமிடத்திலும், 12 ஆயிரத்து 207 பேருக்கு உறுதி செய்யப்பட்டு மகாராஷ்டிரம் மூன்றாமிடத்திலும், 11 ஆயிரத்து 42 பேருக்கு உறுதி செய்யப்பட்டு கர்நாடகம் நான்காமிடத்திலும் உள்ளது.

நாட்டில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 60 லட்சமாக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments