பீகாரில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து ரூ 1.90 கோடி பணம் கொள்ளை; போலீசார் தீவிர விசாரணை

0 3223

பீகார் மாநிலம் ஹாஜிபுரில் பட்டப்பகலில் தனியார் வங்கியைக் கொள்ளையடித்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியது.

மக்கள் நடமாட்டம் மிக்க சதார் பகுதியில் அமைந்த தனியார் வங்கியின் கிளைக்குள் புகுந்த கொள்ளையர்கள் சிலர் வங்கி ஊழியர்களை மிரட்டி சுமார் இரண்டு கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்தனர்.

தகவல் கிடைத்ததும் மாவட்ட கண்காணிப்பாளர் வைஷாலி தலைமையிலான காவல்துறையினர் வங்கியை முற்றுகையிடுவதற்குள் கொள்ளையடித்த பணத்துடன் அவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

கொள்ளையர்கள் பற்றி ஒரு தகவலும் தெரியாமல் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments